ஆப்கானிஸ்தானில் கன மழையால் வெள்ளப் பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கன மழையால் வெள்ளப் பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு


காபூல், ஜன.


ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. பர்யாப், படக் ஷான், ஹெராத் கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், பாட்கிஸ், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் சுமார் 1,859 வீடுகள் மற்றும் 13,941 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1,200 கால்நடைகள் உயிரிழந்ததாக ஆப்கன் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத மதிப்பை அளவிட மதிப்பீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதனால், ஆப்கன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பட்டுள்ளது.



ஆப்கனில் கனமழை - வெள்ளம்; 17 பேர் பலி


ஆப்கன் நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் வெள்ளம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1,800 குடும்பங்கள் வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடரில் 274 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 1,550-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%