தமிழக அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டில் 545 குழந்தைகள் பிறந்தன

தமிழக அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டில் 545 குழந்தைகள் பிறந்தன





தமிழக அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு தினத்தில் 545 குழந்தைகள் பிறந்தன.


நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் ஆங்கில புத்தாண்டோடு தங்களது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-


சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.


இந்த குழந்தைகளை ஆஸ்பத்திரியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சந்திரகலா உள்ளிட்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.


மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.


காஞ்சீபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண்5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண் 6, பெண் 14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண் 24, பெண் 23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண் -12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும்,சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்து உள்ளன.


நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகளும் (ஆண் 9, பெண் 15), தூத்துக்குடியில் 12 (ஆண் 4, பெண் 8) குழந்தைகளும், தென்காசியில் 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.


திருச்சியில் 13 (ஆண் 8, பெண் 4), பெரம்பலூரில் 10 (ஆண் 7, பெண் 3), அரியலூரில் 3 (ஆண் 2, பெண் 1), புதுக்கோடடையில் 14 (ஆண் 9, பெண் 5), கரூரில் 4 குழந்தைகள் (ஆண் 4) பிறந்துள்ளன. கிருஷ்ணகிரியில் 15 (ஆண் 7, பெண் 8), தர்மபுரியில் 13 (ஆண் 7, பெண் 6), நாமக்கல்லில் 10 (5 ஆண், 5 பெண்), சேலத்தில் 29 குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சையில் 22 குழந்தைகளும், திருவாரூரில் 3 குழந்தைகளும், நாகையில் 6 குழந்தைகளும், மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.


இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.புதுச்சேரியை பொறுத்தவரை புத்தாண்டான நேற்று 26 குழந்தைகள் (ஆண் 12, பெண் 14) பிறந்துள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%