ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு


சென்னை, அக். 9–


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி திரு​வேங்​கடம் மட்டும் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். மேலும் சம்போ செந்​தில், மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார்.


இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


இதற்கிடையே முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவுடி நாகேந்திரன் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%