ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.


தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 26.09.2025 அன்று 450 சிறப்புப் பேருந்துகளும், 27.09.2025 அன்று 696 சிறப்பு பேருந்துகளும், 29.09.2025 அன்று 194 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக 7,616 பேருந்துகளில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணம் செய்துள்ளனர். மேலும் 30.09.2025, தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,310 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள 26,013 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.


6,91,757 பேர்


பயணம்


அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் 30/09/2025 நள்ளிரவு 12 மணி நிலவரப்படி மற்றும் அதிகாலை 2 மணிவரை சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,100 பேருந்துகளும் ஆக கடந்த 26/09/2025. முதல் 30/09/2025 வரை, தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,843 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 13,303 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் 6,91,757 பயணிகள் பயணித்துள்ளனர்.


முன்னதாக ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வின்போது, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் இரா.கஜலட்சுமி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் க.குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%