கரூர் சம்பவத்தில் உடனடியாக சென்றதை சிலர் தவறாக பேசுவது கஷ்டமாக இருக்கிறது

சென்னை, செப். 30-
கரூர் சம்பவத்தில் உடனடியாக சென்றதை சிலர் தவறாக திரித்து பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவ லகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், “ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளதாகவும், இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப் பட்டுள்ளதாகவும், நாகப்பட்டினத்தில் இருந்து வரும்போது செய்தி வந்ததும், இரவு பத்து மணிக்கு கரூர் சென்றதாகவும் அமைச்சர் தெரிவித் தார். பிணவறை முன்பு மாணவர்கள் இறந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி வரும்போது எந்த மனி தனுக்கும் மன வேதனை இருக்கும் என்றார். கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் நடந்த போது மற்ற அரசாங்கங்கள், காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தன என்றும், ஆனால் தமிழக அரசு தவெக நிர்வாகிகளை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் நீதிபதி தலை மையில் அமைக்கப்பட்ட ஆணையம் யார் மீது தவறு என்பதை கண்டுபிடித்து தெரி விக்கும்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?