
மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை மதுரை, செப்.30- மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. மின்சார ரயில்களை இயக்க இந்த ரயில் பாதைகளின் மேலே செல்லும் மின்வடங்களில் 75,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் 230 வோல்ட் மின்சாரம் மனித உடம்பில் பட்டாலே தூக்கி எறியப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதற்கு 100 மடங்கு அதிகமான மின்சாரம் ரயில் பாதை மின்வடங்க ளில் செல்கிறது. இதனால் ரயில் பாதை மின் வடம் அருகில் சென்றாலே பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும். எனவே பொதுமக்கள், இளைஞர்கள் ரயில் பாதை மின்வடம் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. கடந்த சனிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மேலே 13 வயது சிறுவன் ஏறி சுயபடம் எடுக்க முயன்ற போது பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அதேபோல கடந்த ஞாயிற்றன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் உருளை சரக்கு ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஏறி 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் வடத்தை பிடித்த தால் தீப்பிடித்து தூக்கி எறியப்பட்டு நடைமேடையில் உயிர் துறந்தார். இது போன்ற சம்பவங்கள் மற்றும் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பை தவிர்க்கவும் ரயில் பாதை மின்வடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள் ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?