ஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை!
Sep 27 2025
166
ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?