ஆளுநர் இல்லம் பெயர் மாற்றம்: முதலமைச்சர் விமர்சனம்

ஆளுநர் இல்லம் பெயர் மாற்றம்: முதலமைச்சர் விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் இல்லத் தின் பெயர் ‘ராஜ் பவன்’ என்பதிலிருந்து ‘லோக் பவன்’ அதாவது “மக்கள் பவன்” என மாற்றப்படுவதாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மாற்ற 2024 ஆளுநர் மாநாட்டில் தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்திருந் தார். இந்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. யூனியன் பிரதேசங்களில் ஆளுநர் மாளிகை “லோக் நிவாஸ்” என அழைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சிந்தனை மாற்றமே தேவை: முதலமைச்சர் மாநிலங்களில் உள்ள ராஜ் பவன் கள் இனி ‘லோக் பவன்’ என்று அழைக்கப் படும் என ஒன்றிய அரசு அறிவித்து உள்ளதை எதிர்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதி விட்டுள்ளார். “சட்டமன்றத்தை மதிக்கா தவர்கள் மக்கள் மாளிகை எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பு என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களையும் இறையாண்மையுள்ள சட்ட மன்றத்தையும் மதிப்பதுதான் தற்போ தைய தேவை” என்றும் அவர் தெரி வித்துள்ளார். “சிந்தனையிலும் செயலி லும் மாற்றம் இல்லாவிட்டால் பெயர் மாற்றமும் தேவையற்றது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%