சென்னை, நவ.30 - தமிழ்நாட்டில் திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், புதிதாக விண்ணப்பித்துத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த மாதம் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோ றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான முன்னோட்டமாக, தற்போது புதிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரு ரூபாய் செலுத்தி சோதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதிதாக இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தற்போது ரூபாய் ஒன்று தொகையை அனுப்பி சோதித்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஒன்று வரவு வைக்கப்பட் டதற்கான குறுஞ்செய்தி அல்லது வங்கி அறிவிப்பைப் பெற்றிருந்தால், அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற் குத் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர் என்பதை உறுதி செய்து கொள்ள லாம். இந்தச் சோதனைப் பணிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதுவரை சுமார் 1.15 கோடிக்கும் அதிக மான பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பய னடைந்து வருகின்றனர். ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் காரணமாகப் பல லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை யடுத்து, புதிய குடும்ப அட்டை வைத்திருப் பவர்கள் மற்றும் தளர்வுகளின் கீழ் வந்த வர்கள் எனப் பலரும் மீண்டும் விண்ணப்பிக் கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த விண்ணப் பங்கள் மீதான பரிசீலனைப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?