ஆவடி பள்ளி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார்

ஆவடி பள்ளி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார்


ஆவடி, அக். 10–


ஆவடி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மண்டல பகுதிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு நடவடிக்கையை கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை கருத்தில் கொண்டு, ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர், புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பள்ளி மண்டலம் என்ற திட்டத்தை பட்டாபிராம், தண்டுரை தொடங்கி வைத்தார்.


அதைத் தொடர்ந்து அம்பத்தூர் சர் இ ராமசாமி முதலியார் மேல் நிலைப்பள்ளியில், ஆவடி மாநகர காவல் ஆணையாளர் கி. சங்கர், பள்ளி மாணவ மாணவிகளிடையே போதை பழக்கம் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியும், போதைப்பொருட்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள ட்டங்களில் குறிப்பிடபட்டுள்ள 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது மற்றும் பள்ளி வளாகத்தில் இருந்து 100 யார்ட்ஸ் தொலைவிற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது குறித்து எடுத்துரை மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் காவல் ஆணையாளர் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டால் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பின்னர், பள்ளி வளாகத்திலிருந்து 100 யார்ட்ஸ் தொலைவில், சாலையில் வெண்மை நிற பெயிண்ட் கொண்டு அடையாளப்படுத்தி அங்கு “புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி” என்ற வாசகங்கள் கொண்ட பேரிகேட் அமைத்து அவற்றை ஆவடி காவல் ஆணையாளர் திறந்து வைத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் கே.பவானீஸ்வரி, செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர், காவல் உதவி ஆணையாளர்கள், உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%