கரூரில் 41 பேர் பலியான சம்பவம் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூரில் முகாமிட்டு தொடர் விசாரணை

கரூர், அக். 10–
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூரில் முகாமிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27–ந் தேதி த.வெ.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
5-–ந் தேதி முதல் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த குழுவினர் 3 வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது 3 இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகை, அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடம், கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள டி.என்.பி.எல். வளாகம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் 7 பேர் ஆஜரான நிலையில், நேற்று மீதமுள்ள 3 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி முடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறப்புக்குழு விசாரணைக்கு எதிராக தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?