வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் “ஜென் ரைஸ்” புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் “ஜென் ரைஸ்” புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி



சென்னை, அக். 10–


தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் – ஜெனரேஷன் இந்தியா பவுண்டேஷனுடன் இணைந்து “ஜென் ரைஸ் ” எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஜென் ரைஸ் திட்டம், திறன் மிகு தமிழ்நாட்டை உருவாக்கும் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கத்தையும், ஜெனரேஷன் இந்தியாவின் உலகளாவிய திறன் மேம்பாட்டு அனுபவத்தையும் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், தரமான பயிற்சி மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் மாநில இளைஞர்களுக்குக் கிடைக்க செய்யப்படுகிறது.


இத்திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து, இளைஞர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் தொழில்முறை வாய்ப்புகளை அடைய வழி செய்கின்றன. இதில் ஐடி டெக்னிக்கல் சப்போர்ட் அசோசியேட், ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர், கிளவுட் அப்ளிகேஷன் டெவலப்பர் போன்ற பல துறைகள் அடங்கும்.


இது குறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிராந்தி குமார் பதி கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தரமான பயிற்சியும் பொருளாதார ரீதியாக நிலையான வேலை வாய்ப்புகளும் பெற வேண்டும் என்பதே துணை முதல்வரின் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கம். ஜென் ரைஸ் மூலம், நவீன பயிற்சி முறைமைகள் மற்றும் முன்னேற்றமான கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். இது இளைஞர்களுக்கு தேவையான திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை நிலையான மற்றும் உயர்ந்த ஊதிய வேலைகளுடன் இணைக்கும். ஜெனரேஷன் இந்தியா ஃபவுண்டேஷனுடன் இணைந்த இந்த கூட்டாண்மை, தமிழ்நாட்டை திறமையாளர் மையமாக மாற்ற எங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது என்றார்.


ஜெனரேஷன் இந்தியா பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ருணேஷ் சிங் கூறுகையில், வெற்றிநிச்சயம் திட்டத்தின் நோக்கத்துடன் இணைந்து, ஜென் ரைஸ் திட்டம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தேவையான திறன்களையும், தன்னம்பிக்கையையும், நிலையான தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தொழில் வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் என்று கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%