ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஜெருசலேம், செப். 22–


பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.


இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:


பாலஸ்தீனம் என்னும் ஒரு நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு நான் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்பிய பிறகு பதிலடி கொடுக்கப்படும்.


படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அழுத்தத்திற்கு எதிராக, அந்த பயங்கரவாத அரசு உருவாவதை பல ஆண்டுகளாக நான் தடுத்துள்ளேன். நாங்கள் இதை உறுதியுடனும், புத்திசாலித்தனமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம். மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்வோம். அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு திரும்பிய பிறகு பதிலடி வழங்கப்படும். காத்திருங்கள்.


இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%