ஆவின் நெய் விலை குறைப்பு; ஆனால் தள்ளுபடி ரத்து

ஆவின் நெய் விலை குறைப்பு; ஆனால் தள்ளுபடி ரத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள் கிழமை குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனமும் பால் பொருள்களின் விலையைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 700-இல் இருந்து ரூ. 660 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பன்னீர் விலை (500 கிராம்) ரூ. 300-இல் இருந்து ரூ. 275 ஆகவும், பதப்படுத்தப்பட்ட பால் (யுஎச்டி பால்) 150 மிலி ரூ.12-இல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பின்படி, 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ.3,600-இல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப் பட்ட நிலையில், இந்த வகை பொருளுக்கு ஆவின் அளித்து வந்த ரூ. 50 தள்ளுபடியை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், முன்பு அளிக்கப்பட்ட தள்ளுபடியை சேர்த்து தற்போது 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ.3,300 -க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 15 லிட்டர் நெய் டின்னுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 175 தள்ளுபடியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறு வனம், அடுத்தடுத்து வெண்ணெய், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மில்க் ஷேக் போன்ற பிற பொருள்களின் விலையையும் குறைத்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%