தஞ்சாவூர் கோ-ஆப் டெக்சில் ரூ.2.30 கோடி தீபாவளி விற்பனை இலக்கு

தஞ்சாவூர் கோ-ஆப் டெக்சில்  ரூ.2.30 கோடி தீபாவளி விற்பனை இலக்கு

தஞ்சாவூர், செப். 22-

தஞ்சாவூர் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில், தீபாவளி விற்பனையை மாவட்ட உதவி ஆட்சியர்(பயிற்சி) கார்த்திக் ராஜா தொடக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் 2024 இல் தீபாவளிக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 2025 தீபாவளிக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம். விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயலாளர் கோபி மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%