இங்கிலாந்து: 3 வயது மகளை தெரிந்தே பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்
Oct 04 2025
113
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் பென்னைன் வே என்ற இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான மன்பிரீத் ஜாதனா (வயது 34) மற்றும் ஜஸ்கிரெத் சிங் உப்பல் (வயது 36) வசித்து வருகின்றனர். இவர்களுடைய 3 வயது மகளான பெனலோப் சந்திரீ 2023-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி மாலையில் வீட்டில் உயிரிழந்து உள்ளது.
அதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டது தெரிய வந்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து கடந்த மாதம் குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர். 3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது.
இதற்கான உத்தரவை நீதிபதி லின் டெய்டன் பிறப்பித்து உள்ளார். வருகிற டிசம்பர் 16-ந்தேதி கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?