எறிப்பந்து போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

எறிப்பந்து போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்


ஈரோடு, அக். 1–


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் இமாலய சாதனை படைத்துள்ளனர்.


ஐபிஏஏ இன் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) எம்ஏஎம் பாலிடெக்னிக் கல்லூரி திருச்சியில் நடைபெற்று வருகின்றது. அதில் ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து இமாலய சாதனை புரிந்தனர்.


இந்த பெருமைக்குரிய வெற்றிக்குழுவினருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தலைமை செயல் அதிகாரி ஜி.கௌதம், கல்லூரி முதல்வர் எஸ்.பிரகதீஸ்வரன், துணை முதல்வர் பி.மணி, அனைத்து துறை தலைவர்கள், இருபால் ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குனர் என்.பிரபாகரன், மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து பரிசுக் கோப்பைகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்.


இந்த சாதனையானது வெங்கடேஸ்வர ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு துறையின் உயர்ந்த தரத்தையும், மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் விளைவையும் காட்டும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%