இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியாக மலரஞ்சலி, மரியாதை
Sep 19 2025
34

திண்டிவனம், செப். 17–
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாளையொட்டி, அவர்களது நினைவுத் தூண்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 வன்னியர்களின் உருவப்படங்களுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ராமதாஸ், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு உயிர்நீத்த தியாகிகளின் 38-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை. தியாகிகளின் தியாகத்தால் பலர் பயன் பெற்று வருகின்றனர். 10.5 சதவீத இடஒதுக்கீட்டினை கண்டிப்பாக பெறுவோம் என தெரிவித்தார்.
மேலும் இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சித்தணி, பனையபுரம், கோலியனூர், கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களுக்கு மலர் வளையம் வைத்து ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?