இதுவரை இல்லாத சாதனையை படைத்த தமிழ் யூடியூப் சேனல்!

இதுவரை இல்லாத சாதனையை படைத்த தமிழ் யூடியூப் சேனல்!


 சமையல் விடியோக்கள் பதிவிடப்பட்டு வரும் இந்த சேனலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.


அறந்தாங்கி அடுத்த சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அய்யனார், பெரியதம்பி, முருகேசன், முத்துமாணிக்கம், தமிழ்ச்செல்வன் என 6 பேர் கொண்ட குழுவினர் சேர்ந்து வில்லேஜ் குக்கிங் சேனலை தொடங்கினர்.


கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சேனலில், தனிப்பட்ட முறையில் சமையல் விடியோக்களை பதிவிட்டு வந்தனர். பின்னர் அதிக எண்ணிக்கையிலானோர் உண்ணும் வகையில் பிரமாண்டமாக சமைக்கத் தொடங்கி விடியோவாக பதிவு செய்தனர்.


ஆரம்பத்தில், இவர்களின் விடியோக்கள் பெரிதாக மக்களைக் கவரவில்லை. வருவாயும் கிடைக்கவில்லை. இந்தபோதும் தளராமல் குழுவாகச் செயல்பட்டு விடியோக்களைப் பதிவிட்டு வந்தனர்.


2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் உறுப்பினர்களுடன் சேர்ந்து கிராமிய முறைப்படி உணவு சமைத்து அவர்களுடன் அமர்ந்து உண்டார். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து விரைவில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸ் என்ற பெருமையைப் பெற்றனர். அந்த காலகட்டத்தில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட ஒரே தமிழ் சேனலாக இது இருந்தது.


ராகுல் காந்தியுடன்...

தற்போது 4 ஆண்டுகள் கழித்து 3 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட சேனலாக மாறியுள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறி வருகின்றனர். இதனையும் விடியோவாகப் பதிவிடுகின்றனர்.


உலகளவில் யூடியூபில் மிகச்சிறந்த உணவு வீடியோக்களைப் பதிவேற்றும் 100 யூடியூப் சேனல்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%