கடலை மிட்டாய் வியாபாரி உலக்கையால் அடித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்

கடலை மிட்டாய் வியாபாரி உலக்கையால் அடித்துக்கொலை: வாலிபர் வெறிச்செயல்


 

தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நாகராஜ் தனது மகள்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதே ஊரைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் ஜெய்சங்கர்(27), டிரைவர்.


கடந்த 27-ந் தேதி நாகராஜின் மகள்வழி பேத்தியின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதனால் நாகராஜ் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். இதையறிந்த ஜெய்சங்கர் தனக்கும் மது வாங்கித் தரும்படி கேட்டார். ஆனால் அவரை நாகராஜ் மதுவிருந்துக்கு அழைக்கவில்லை. இதனால் அன்று இரவில் மீண்டும் தனக்கு மது வாங்கித் தரும்படி ஜெய்சங்கர் கேட்டு அடம்பிடித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.


ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகராஜை சரமாரி குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்த உலக்கையால் ஜெய்சங்கர் சரமாரி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு ஜெய்சங்கர் அங்கிருந்து தப்பி ஓடினார்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ஜெயசங்கரை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் வியாபாரியை, வாலிபர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%