ராஞ்சி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தரப்பில் விராட் கோலி சிறப்பாக ஆடி ரன் குவித்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்த அவர் சதம் விளாசி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து அதிரடியாக அவர் 135 ரன்களில் (120 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வடிவிலான போட்டியில் ( 3 வடிவிலான போட்டிகள் = டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் அடித்திருந்ததே ஒரு வடிவத்தில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சதங்களாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 52 சதங்களுடன் புதிய வரலாறு படைத்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?