இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்! தைரியம் இருந்த இங்க போங்க!

இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்! தைரியம் இருந்த இங்க போங்க!


 


இந்தியாவில் அழகான இடங்களை போலவே ஆபத்தான இடங்களும் உள்ளன. அப்படி இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்களை பற்றிய பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

 

சுற்றுலா தளம் என்றாலே பெரும்பாலும் மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கே மக்கள் செல்கிறார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சிகரமான பயணங்கள் ஆபத்தான பயணமாக இருந்தால் உங்களுக்கு சம்மதமா?.அப்படி ஆபத்தான சுற்றுலா தளங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த இடங்களுக்கு ஒரு த்ரில் மற்றும் தைரியம் வேண்டும் என்று விரும்பும் சுற்றுலா பயணிகள் மட்டுமே செல்வார்கள். முக்கியமாக இந்த சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்தை அழைத்துச்செல்வது தவறானது. இந்த இடங்களை தற்போது இந்த பட்டியலில் காணலாம்.


1.Dumas Beach (குஜராத்)

Dumas Beach 



இந்த அரபிக் கடலில் உள்ள Dumas Beach பார்ப்பதற்கு சாதாரண கடற்கரை போலவே இருக்கும். ஆனால் இந்த இடம் என்பது முந்தய காலத்தில் ஹிந்துக்களின் சுடுகாடாக இருந்துள்ளது. இங்கு பலரை எரித்துளார்கள். இங்கு கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த இடத்தை பகலில் மட்டுமே நாம் காணமுடியும். இங்கு இரவு நேரங்களில் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.


2.Pamban Bridge (தமிழ்நாடு)

Pamban bridge



தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இந்த பாம்பன் அமைந்துள்ளது.இந்த பாலம் 2.065 கிலோமீட்டர் நீளம் உள்ளது. இந்த பாம்பன் பாலம் வெள்ளையர்களால் கட்டப்பட்டது. இந்த ரயில் பாலம் செல்வதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பாலங்களில் ஒன்றாகும்.


சிறிய தவறு நிகழ்ந்தாலும் மொத்த ரயில் கடலுக்குள் சென்றுவிடும். இதன் காரணமாகவே மிகவும் குறைந்த வேகத்தில் இந்த பாலத்தை ரயில் கடக்கும். உலகின் ஆபத்தான பயணங்களில் இதுவும் ஒன்று.


3.Siju (மேகாலயா)

Siju



வவ்வால் குகை என்று அழைக்கப்படும் இந்த இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ளது. இந்த குகை பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் தூரம் ஆழம் கொண்டது. இந்த குகையில் இன்னும் பல இடங்களுக்கு மனிதர்கள் செல்லவில்லை.


4.Kuldhara (ராஜஸ்தான்)

Kuldhara



இந்த பழமையான ஒரு நகரம் ஒரு காலத்தில் மக்களால் நிரம்பியிருந்துள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் ஒரே இரவில் அனைவரும் வெளியேறிவிட்டனர் என்றும் அவர்கள் அதன் பிறகு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.


5.அந்தமான் தீவுகள்

Andaman



இந்த தீவுகள் இந்தியாவிற்கு வெளியே வங்காள விரிகுடாவில் உள்ளது. இந்த தீவுகளில் மனிதர்கள் வசித்தாலும் இன்னும் சில தீவுகள் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் மனிதர்களை வெறுக்கிறார்கள்.


6.Hemis national park (லடாக்)

Hemis Park



இங்கு பனி சிறுத்தைகள் அதிகம் உள்ளன. இங்கு எலும்பை நொறுக்கும் குளிர் உள்ளது. இது -20டிகிரி வரை செல்லும். இந்த இடம் இந்தியாவின் தனித்துவமான பணிசிறுத்தைகளின் தலைநகராக உள்ளது. அனல் இங்கு செல்வது மிகவும் ஆபத்தானது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%