ஏடிஎம் வேனில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய பெங்களூரு போலீஸார்

ஏடிஎம் வேனில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய பெங்களூரு போலீஸார்


 

பெங்களூரு: ஏடிஎம் பணம் நிரப்​பும் வேனில் இருந்து ரூ.7.11 கோடி கொள்​ளை​யடித்த மர்ம நபர்​களை தனிப்​படை போலீ​ஸார் நெருங்கி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.


பெங்​களூரு​வில் உள்ள ஜே.பி. நகரில் எச்​டிஎஃப்சி வங்கி கிளை​யில் இருந்து நேற்று முன் தினம் பணம் ஏற்​றிக்​கொண்டு சிஎம்​எஸ் நிறு​வனத்​தின் வேன் ஜெயநகர் அசோகா தூண் அருகே சென்​றது. அப்​போது இன்​னோவா வாக​னத்​தில் வந்த மர்ம நபர்​கள் அதனை வழிமறித்து ரிசர்வ் வங்கி அதி​காரி​களை போல நடித்து ரூ.7.11 கோடியை கொள்​ளை​யடித்து சென்​றனர்.


இதுகுறித்து சித்​தாபுரா போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, 4 தனிப்​படைகளை அமைத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த கொள்​ளை​யில் நன்கு விஷ​யம் அறிந்த உள்​வட்ட ஆட்​கள் ஈடு​பட்​டுள்​ளார்​களா? எதற்​காக கொள்​ளை​யடிக்​கப்​பட்ட விஷ​யத்தை போலீ​ஸில் தாமத​மாக புகார் அளித்​தார்​கள்? வேனில் இருந்த துப்​பாக்கி ஏந்​திய பாது​காவலர் கொள்ளை சம்​பவத்​தின்​போது ஏன் ஆயுதத்தை பயன்​படுத்​த​வில்​லை? வெளி​மாநிலத்​துக்கு கொள்​ளை​யர்​கள் தப்பி ஓடி விட்​டனரா என்பன உள்​ளிட்ட கோண‌ங்​களில் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.


4 பேரிடம் விசா​ரணை: பணம் கொள்​ளை​யடிக்​கப்​பட்​ட​போது சிஎம்​எஸ் வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்​மை​யா, துப்​பாக்கி ஏந்​திய பாது​காவலர் ராஜண்​ணா, ஓட்​டுநர் வினோத், காவலர் அஃப்​தாப் ஆகிய 4 பேரிட​மும் தனிப்​படை போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்​தினர்.


மேலும் நால்​வரின் சமூக வலைதள கணக்​கு​கள், செல்​போன், கணினி ஆகிய​வற்றை ஆராய்ந்து வரு​கின்​றனர். செல்​போன் எண்​களுக்கு வந்த அழைப்​பு​கள், குறுஞ்​செய்​தி​கள், புகைப்​படங்​கள், வாட்ஸ் அப்​பில் பகிரப்​பட்ட தகவல்​கள் ஆகிய​வற்றை ஆராய்ந்​தனர்.


இதுத​விர ஜே.பி. நகரில் இருந்து டைரி சர்க்​கிள் வரையி​லான சாலை​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை​யும் போலீ​ஸார் ஆராய்ந்​தனர். குறிப்​பாக சம்​பவம் நிகழ்​வதற்கு ஒரு மாதத்​துக்கு முன்​பிருந்து கொள்ளை அடிப்​ப​தற்​கான திட்​டமிடல் ஏதேனும் நிகழ்த்​தப்​பட்​டிருக்​கிறதா என ஆய்வு செய்​தனர்.


இந்த ஆய்​வின்​போது சந்​தேகத்​துக்​குரிய 4 பேர், குறிப்​பிட்ட சாலை​யில் அடிக்​கடி வந்து சென்​றது தெரிய​வந்​துள்​ளது. அவர்​கள் சம்​பந்​த​மான சிசிடிவி கேமரா பதிவு​களை வைத்து வங்கி மற்​றும் ஏடிஎம் பணம் நிரப்​பும் வேனின் ஊழியர்​களிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அந்த நால்​வரை​யும் போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.


இதுகுறித்து கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வரா கூறுகையில், “போலீ​ஸாருக்கு குற்​ற​வாளி​கள் தொடர்​பான முக்​கிய துப்​பு​கள் கிடைத்​துள்​ளன. அதனை வைத்து குற்​ற​வாளி​களை விரை​வில் கைது செய்ய போலீ​ஸார் முயன்று வரு​கின்​றனர். பெங்​களூரு முழு​வதும் தீவிர வாகன தணிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. கர்​நாடகா மட்​டுமல்​லாமல் ஆந்​தி​ரா, தமிழ்​நாடு ஆகிய மாநிலங்​களி​லும் தேடு​தல்​ வேட்​டை நடந்​து வரு​கிறது” என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%