சென்னையில் போதை விருந்து: ‘சிம்பு’ பட இணைத் தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது

சென்னையில் போதை விருந்து: ‘சிம்பு’ பட இணைத் தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது


சென்னையில் போதை விருந்து நடத்தியதாக ‘சிம்பு’ பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை எல்டாமஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் போதை விருந்து நடப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த சர்புதீன், சீனிவாசன், சரத் என்ற 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான சர்புதீன் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.


எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%