இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையம் அமைக்க இந்தோ திபெத் எல்லை போலீஸ் திட்டம்
ஜம்மு: இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையங்களை அமைக்கவுள்ளதாக இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனாவின் 3,488 கி.மீ தூர எல்லைப் பகுதியை கண்காணிக்கும் பொறுப்பில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ்(ஐடிபிபி) ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். 9,000 அடி முதல் 14,000 அடி வரையுள்ள மலைப் பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஐடிபிபி-யின் 64-வது எழுச்சி தினம் ஜம்முவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதன் தலைமை இயக்குனர் பிரவீன் குமார் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா - சீனா எல்லையில் முன்பு 180 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தற்போது 215-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7 புதிய பட்டாலியன்கள் அமைக்கப்பட்டதன் மூலம் இத்திட்டம் வலுப்பெற்றுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதி கண்காணிப்பு மேம்பட்டுள்ளது. மேலும் 41 கண்காணிப்பு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதில் 10 மையங்களில் முழுவதும் பெண் காவலர்கள் பணியாற்றுவர். லடாக்கில் உள்ள லூகுங் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தாங்கி ஆகிய இடங்களிலும் பெண் காவலர்கள் பணியாற்றும் மையங்கள் அமைக்கப்படும்.எல்லைப் பகுதியில் மேலும் 8 மையங்களில் பெண்கள் பணியாற்றுவர். ஐடிபிபி பயிற்சி மையங்களில் வழங்கப்படும் பயிற்சிகள், மலைப் பகுதிகளில் பணியாற்றும் வகையில் மேம்படுத்தப்படும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?