இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டி போலித் தகவல்களை பரப்பும் “கோடி மீடியா” ஊடகங்கள்
13ஆவது சீசன் மகளிர் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் (ஒருநாள்) இந்தியா மற்றும் இலங்கையில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. ஞாயிறன்று இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும், ஆடவர் ஆசியக் கோப்பையைப் போல கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதே போல டாஸ் போடும் போது கூட சிறிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. இதுவும் நடுவர்களால் ஏற்பட்டதே தவிர இந்தியா - பாகிஸ்தான் வீராங்க னைகளால் ஏற்படவில்லை. உண்மை இல்லை ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பூச்சி ஸ்பிரே அடித்த நிகழ்வை பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊட கங்கள் மோதலை தூண்டும் வகை யில் செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதில், ஆபரேசன் சிந்தூரை குறிக்கும் விதமாக பாகிஸ் தான் கேப்டன் பாத்திமா சனா ஸ்பிரே அடித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீராங்கனைகள் மைதானத்தை விட்டு வெளியேறினர். விளையாட்டில் பாகிஸ்தான் அணி மீண்டும் மோதலை தூண்டுகிறது” என “கோடி மீடியா” ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. பாஜகவினர் இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மதம் சார்ந்த வெறுப்புப் பதிவுகளை வெளியிட்டனர். ஆனால் உண்மையில் மோதலை தூண்டியது “கோடி மீடியா” ஊட கங்கள் தான். இலங்கையில் தற்போது பருவமழை காலம் ஆகும். இதனால் பூச்சிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. மைதானத்தில் பிரம்மாண்ட விளக்குகள் இருப்பதால் பூச்சிகள் அங்கு படையெடுத்தன. ஞாயிறன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது மைதானத்தில் பூச்சிகளின் படை யெடுப்பால் இரு அணி வீராங்கனை களும் மிகவும் சிரமப்பட்டனர். இந்திய அணி பேட்டிங்கின் போது 28ஆவது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, பிட்ச் பகுதியில் அதிகமாக பூச்சிகள் பறந்ததால் நடு வர்களின் அனுமதியுடன் பாகிஸ்தான் கேப்டன் ‘ஸ்பிரே’ அடித்தார். ஆனா லும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதன் பின்னர் 34ஆவது ஓவர் முடிந்ததும் வீராங்கனைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மைதான ஊழியர்கள் பூச்சிகளை ஒழிக்கும் மருந்துகளை புகை பரப்பும் இயந்திரம் மூலம் அடித்தனர். இதனால் 15 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதுதான் நடந்தது. “கோடி மீடியா” ஊடகங்கள் கூறியது போன்று எதுவும் நடக்கவில்லை.