உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 22 பதக்கங்கள் குவித்த இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு குவியும் பாராட்டு
Oct 09 2025
56
12ஆவது சீசன் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் தில்லியில் செப்., 27ஆம் தேதி தொடங்கி அக்., 5 அன்று நிறைவு பெற்றது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 2,200 பேர் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த உலக பாரா தடகள சாம்பி யன்ஷிப் தொடரின் பதக்கப்பட்டியலில் பிரேசில் நாடு 15 தங்கம், 20 வெள்ளி, 9 வெண்கலம் என 44 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது. சீனா 13 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என 52 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், ஈரான் 9 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தன. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 10ஆவது இடத்தை பிடித்தது. அக்., 4ஆம் தேதி பதக்கப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருந்த இந்தியாவிற்கு கடைசி நாளில் எதிர்பார்த்த வகையில் பதக்கங்கள் கிடைக்கவில்லை. இதனால் 10ஆவது இடத்திற்கு சரிந்தது. எனினும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 22 பதக்கங்கள் குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர் - வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?