ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் புதிய மதுரை மண்டல அலுவலகம் இயக்குநர்கள் சந்தானம், தங்கராஜு திறந்து வைத்தனர்

ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் புதிய மதுரை மண்டல அலுவலகம்  இயக்குநர்கள் சந்தானம், தங்கராஜு திறந்து வைத்தனர்


மதுரை, அக். 7–


ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மதுரை மண்டலம் அலுவலகத்தை இயக்குநர்கள் இ.சந்தானம், சி.தங்கராஜு திறந்து வைத்தார்கள்.


ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ நுண்கடன் நிறுவனம் 130 கிளைகளில் 1100 பணியாளர்களுடன், 1400 கோடி வணிக வளர்ச்சியினை எட்டி, ஏழை எளிய மகளிர் வாழ்வில் முன்னேறும் வகையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய நுண்கடன் வழங்கி வருகிறது. வணிக வளர்ச்சி உயர்வதன் காரணமாகவும், கிளையில் பணிகள் சுலபமாக நடைபெறுவதன் பொருட்டும் 4 மண்டல அலுவலகம் தமிழ்நாட்டின் துவங்கிட திட்டமிட்டு தற்போது சென்னை, திருச்சி மற்றும் கோவையில் மண்டல அலுவலகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இதனைத் தொடர்ந்து தற்போது மதுரை மண்டலம் அலுவலகம், ரெப்கோ வங்கியின் தலைவரும், ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் இயக்குநருமாகிய இ.சந்தானம், ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவரும், ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் இயக்குநருமாகிய சி.தங்கராஜு இணைந்து மண்டல அலுவலகத்தை குத்து விளக்கேற்றி மற்றும் பெயர் பலகையினை திறந்து வைத்து, ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டிலான நுண்கடன் உதவிகளை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கவுரை வழங்கினார். ரெப்கோ வங்கியின் இயக்குநர் எம்.கனகவேல் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர்கள் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றியும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் மதுரை மண்டலத்தை சார்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பிகேபி. பாலமுருகன் வரவேற்புரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் ஆர்.சீனிவாசன், கோட்ட மேலாளர்கள் பி.தண்டாயுதபாணி, ஜி.கருத்ததுரை, பி.செல்வகுமார் மற்றும் எஸ்.ஜீவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். மதுரை மண்டல மேலாளர் எல்.கனகராஜ் நன்றியுரை வழங்கினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%