இந்த வாட்டி ஆன்லைன் சேல்ஸ் வேற மாதிரி நடக்குது.. இதுவரை இல்லாத அளவு சலுகை

இந்த வாட்டி ஆன்லைன் சேல்ஸ் வேற மாதிரி நடக்குது.. இதுவரை இல்லாத அளவு சலுகை


 

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, க்விக் காமர்ஸ் (Quick Commerce) தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆன்லைன் மூலம் 10 நிமிடங்களில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் ப்ளிங்கிட் (Blinkit), ஜெப்டோ (Zepto), ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) போன்ற தளங்கள் தீபாவளி சிறப்பு சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.


இந்தியாவில் தீபாவளி என்பது வெறும் பண்டிகையாக மட்டுமே பார்க்கப்படுவது கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் ஒரு பண்டிகை காலமாக மக்கள் அதனை பார்க்கின்றனர்.


அதனால் தான் பட்டாசு, இனிப்பு மற்றும் துணிவிற்பனை மட்டுமல்லாது வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவையும் அதிக அளவில் தீபாவளி காலத்தில் விற்பனையாகும். இதை அடுத்து பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களான அமேசான் பிளிப்கார்ட் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

 

அந்த வகையில் துரித விற்பனை தளங்களான பிலிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாகார்ட் போன்ற தளங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. மேலும் தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இது போன்ற துரித ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனை களைகட்டியுள்ளது. ப்ளிங்கிட் நிறுவனம் சராசரியாக 20%ஐ கடந்து தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஜெப்டோவில் 15 முதல் 16% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இது கடந்த மாதம் 10-12% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


ப்ளிங்கிட் சலுகை

மேலும், சில பொருட்களுக்கு அதிகபட்ச விற்பனை விலையிலிருந்து 60-70% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதுடன், "ஒரு பொருள் வாங்கினால் மூன்று இலவசம்" போன்ற சிறப்பு சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பேக்கேஜ் உணவுகள், பானங்கள், நொறுக்குத்தீனிகள் போன்ற பொருட்கள் க்விக் காமர்ஸ் தளங்களில் அதிகமாக விற்கப்படுகின்றன. பெப்ஸி, லேய்ஸ், அமுல், ஃபெர்ரோ ரோஷேர், கேட்பரி, ஹல்திராம் போன்ற பிரபல பிராண்டுகள் தங்களது தயாரிப்புகளை தீபாவளி சலுகையில், இத்தளங்களில் விற்பனை செய்கின்றன.


 

இதே நேரத்தில், செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி விலக்கு மற்றும் சீரமைப்பும், தினசரி பயன்பாட்டு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த வரிச்சலுகைகள் காரணமாக, விற்பனையாளர்கள் தங்கள் பண்டிகை ப்ரமோஷன்களை அதிகரித்து, நுகர்வோரின் வாங்கும் ஆற்றலை உயர்த்தியுள்ளனர்.


பண்டிகை சலுகை

மேலும், ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது "பிக் பேங் தீபாவளி சேல்" சலுகையை, தனது க்விக் காமர்ஸ் பிரிவான "மினிட்ஸ் (Minutes)" தளத்துக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதில் இனிப்புகள், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், மற்றும் தீபாவளி பரிசுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இதுபோன்ற பொருட்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.


 


சில்லறை விற்பனை வளர்ச்சி

பண்டிகை காலத்தில் மட்டும், க்விக் காமர்ஸ் துறையின் மொத்த விற்பனை 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13,000 கோடி) வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது மொத்த ஆன்லைன் விற்பனையில் சுமார் 12% பங்காக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.


மேலும், தீபாவளி பொருட்கள் வரிசையில் தீயா விளக்குகள், மலர்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள், அலங்கார விளக்குகள், தூய்மைப் பொருட்கள் போன்றவையும் இப்போது க்விக் காமர்ஸ் தளங்களில் அதிக அளவில், விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த ஆண்டு இந்தியாவின் பண்டிகை கால சில்லறை பொருளாதாரம் ரூ.10.4 லட்சம் கோடி (125-150 பில்லியன் டாலர்) அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 23% வளர்ச்சி என்கின்7றன சந்தை வல்லுநர்கள்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%