இப்படியும் சில பேர்!

இப்படியும் சில பேர்!


    தினசரி காலை வேளையில் நடைபயிற்சி செய்யும் காந்தி பூங்காவில், நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.

எங்கே உங்களை இந்த பக்கம் ரொம்ப நாளாவே காணும் என்று நான் கேட்டதும், அவர் ஆமாம் சார்! மூன்று மாதம் சென்னையிலுள்ள மகள் வீட்டிற்கு போயிருந்தேன். நேற்றுதான் இங்கு வந்தேன் என்றார் .

இங்கு மழையே பெய்யவில்லை போலிருக்கு! சென்னையில் இரவு நேரத்தில் அடிக்கடி மழை பெய்வதாக தெரிவித்தார். எங்கே நமது நண்பர்கள் காளிதாஸ், வைத்தி, முருகேசன் என்று பட்டியல் போட்டு, நடைபயிற்சி நண்பர்களை விசாரித்தார்.

எல்லோருக்கும் வயதாகிக் கொண்டே போகிறது... சிலநாட்கள் வருவார்கள்... சிலநாட்களுக்கு நடைபயிற்சிக்கு வருவதேயில்லை என்று விளக்கம் கொடுத்தேன்.

நடந்து கொண்டே அரசியலை அலசினோம்...ஜனநாயக நாட்டில் தினம், தினம் புதுப்புதுக் கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்றார்...

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று யாரோ சொன்னதை நிருபிக்கத்தான் புதுக்கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.... என்றேன்..

கட்சி ஆரம்பிக்கலாம்... தேர்தலிலும் போட்டியிடலாம்...வோட்டுகளும் வாங்கலாம்.... சீட்டுகள் வாங்கினால் தானே சட்டசபையில் போய் உட்காரலாம்.... என்றார் பாலாஜி...

சரி...பணம் இருந்தால் கட்சி ஆரம்பிக்கலாம்... நமக்கேன் வம்பு....என்று சொல்லியபடியே 

மணி எட்டாகிவிட்டது...புறப்படுவோமோ.... என்று நான் சொன்னதும்,புறப்படவேண்டியதுதான் என்றபடியே இருவரும் பூங்காவை விட்டு வெளியே வந்தோம்...

வீட்டிலிருந்து பூங்காவிற்கு நான் நடந்தே வந்ததால் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று பாலாஜியிடம் கேட்டேன்...!

அதற்கு அவர், நான் அந்தப் பக்கம் போவதாக சொல்லிவிட்டு, அருகிலுள்ள தேநீர் கடைக்குள் வேகமாக நுழைந்தார்...

ஆமாம்! என்னை அவர் தேநீர் சாப்பிட வாருங்கள் என்று அழைக்காமல் போனதற்கு அவர்மீது நான் என்ன கோபப்படவா போகிறேன்....?

--------------------------------------


ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%