உன்னத உறவுகள்

உன்னத உறவுகள்



         ராஜன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் , சாக்கோட்டை சிவன் கோவில் தெருவில் தன் மனைவி கமலாவுடன் வசித்து வருகிறார் . பிள்ளைகள் சென்னையில் வசிக்கிறார்கள். 


   தினமும் காலையில் வாக்கிங் போவதோடு கையில் கூடை எடுத்துச் சென்று காய்கறி , கனிகள் வாங்கி வருவார் ராஜன் .


    சாலையோரத்தில் கடை போட்டு வியாபாரம் செய்யும் முனியம்மா , சரசு , கந்தசாமி , மாரிமுத்து நால்வரிடமும் வாங்குவார் , அத்தோடு அவர்கள் நலம் விசாரித்து விட்டு நடந்து வீட்டுக்கு வருவார் ராஜன்.


        அவரின் அன்றாட நடைமுறை வழக்கமாக இது இருந்தது .

 வெளியூரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு அவ்வப்போது செல்லும் நாட்களில் நால்வரிடமும் தகவல் சொல்லி விடுவார் .


   அதுபோல அவர்களில் யாராவது வரவில்லை என்றாலும் அடுத்த நாள் காரணம் கேட்டு விசாரிப்பார் ராஜன் .


   ஒரு முறை தொடர்ந்து நான்கு நாட்கள் வரவில்லை ராஜன். கவலை அதிகமானதால் ரோடு கூடை வியாபாரிகள் நால்வரும் வியாபாரம் முடிந்த பிறகு பழம் காய்கறி எடுத்துக் கொண்டு

ராஜன் வீட்டுக்கு சென்றனர்.


   " ஐயா ... ஐயா என்று அழைத்தவாறு ராஜன் வீட்டில் நுழைந்தனர் . படுகையில் கிடந்த ராஜனை பார்த்து உடம்புக்கு என்னய்யா என்று கேட்டு கண்ணீர் விட்டனர் .


    நலம் விசாரித்து விட்டு, "உடம்பை நல்லா பார்த்துகங்க ஐயா , சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்..!" என்று ஆறுதல் சொல்லி அன்பு வார்த்தைகளால்

சிலாகித்தனர் .



       அவர்கள் கொண்டு வந்த பொருட்களை ஆசை ஆசையாய் கொடுத்தனர் .


        ராஜன், அவரின் மனைவி கமலா இருவரும் உடல் நிலை குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


         " உங்களுக்கு குணமாகுற வரைக்கும் நாங்க ரெண்டு முறை போட்டு உங்களுக்கு உதவியாகவும் துணையாகவும் இருக்கோம்? " என்று அனுமதி கேட்டனர் பாசத்தோடு.


           மறுத்து விட்ட ராஜன் அவர்கள் அக்கறையில் நெகிழ்ந்து போனார் .


        நால்வருக்கும் கைச் செலவுக்கு பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தனர் ராஜன் தம்பதியர் .


    உடல் நலமில்லை என்று அறிந்தும் உறவினர்கள் யாரும் வந்து பார்க்க கூட வராத நிலையில் , வயிற்றுப் பிழைப்புக்குச் சாலையில் கடைப் பரப்பி விற்கும் கூடை வியாபாரிகளின் பாச அணைப்பில் நெகிழ்ந்த ராஜன் தம்பதியர், ரத்த உறவுகளை விட பன்மடங்கு உயர்ந்த அந்த உள்ளங்களை நினைத்துப் பரவசமடைந்தனர். 


- சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%