இமாச்சல பிரதேசத்தில் விடிய, விடிய கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்கள்
Sep 18 2025
40

மண்டி, செப். 16–
இமாச்சல் பிரதேசத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த பஸ்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இமாச்சல பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் தென்மேற்கு பருவமழை முன்பே பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பும் ஏற்பட்டு மாநிலம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
ஏற்கனவே அம்மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் மோசயாக பாதிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. மண்டி பகுதியில் இரவு முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டியது. மழை காரணமாக சோன்காட் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
தர்மபூர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் அரசு பஸ்கள், ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கூரைகளில் மக்கள் தஞ்சம்
மழை, வெள்ளத்திற்கு அங்கு இருந்த மாணவர்கள் விடுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. விடுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 150க்கும் அதிகமான மாணவர்கள், கட்டடங்களின் கூரைகளுக்கு சென்று பாதுகாப்பாக தங்கி உயிர்தப்பினர். மஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
மழையின் பாதிப்பை அறிந்த பேரிடர் குழுவினர், உள்ளூர் போலீசார் மீட்புப் பணிகளில் இறங்கினர். மீட்பு பணிகளுக்கு இடையே அதிகாரிகள் சேதத்தை மதிப்பீடு செய்து வருகின்றனர். ஒருவர் மட்டுமே காணாமல் போய் உள்ளார், அவரை கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?