இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்



சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது.


மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன.


மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப்​பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட​வுள்​ளன. மெட்ரோ ரயில் கட்​டு​மானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பரில் தொடங்​கியது. சுரங்​கப்​பாதை பணியை பொருத்​தவரை, மாதவரத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கியது.


இதைத்​தொடர்ந்​து, பசுமை வழிச்​சாலை, கலங்​கரை​ விளக்​கம், சேத்​துப்​பட்​டு, பனகல்​ பூங்கா உட்பட பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை பணி​கள் தொடங்​கின. பசுமைவழிச் ​சாலை - அடை​யாறு, சேத்​துப்​பட்டு - ஸ்டெர்​லிங் சாலை, அயனாவரம் - பெரம்​பூர், பனகல்​ பூங்கா - கோடம்​பாக்​கம் (ஒரு பாதை​யிலும்) சுரங்​கப்​பாதை பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. கலங்​கரை விளக்​கம் - மயி​லாப்​பூர் சுரங்​கப்​பாதை பணி இறு​திக்​கட்​டத்​தில் உள்​ளது.


ராயப்​பேட்டை - ஆர்​.கே.சாலை, பசுமைவழிச் ​சாலை - மந்​தைவெளி ஆகிய சுரங்​கப்​பாதை பணி​கள் விரை​வில் நிறைவடைய உள்​ளன. இதுத​விர, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. இது​போல, உயர்​மட்​டப்​பாதை பணி பொருத்​தவரை, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர் தடத்​தில் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. பல இடங்​களி​லும் உயர்​மட்​டப் ​பாதை பணி​கள் மும்​முர​மாக நடை​பெறுகின்​றன. இந்​நிலை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை, ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன.


இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பூந்​தமல்லி - போரூர் தடத்​தில் இந்த ஆண்டு இறு​திக்​குள் அனைத்து பணி​களை முடித்​து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்​ட​மிட்டு உள்​ளோம்.


இதையடுத்​து, சென்னை வர்த்தக மையம் - போரூர் பணி​களை முடிக்க உள்​ளோம். போரூர் - வடபழனி, போரூர்- கோயம்​பேடு ஆகிய உயர்​மட்​டப்​பாதை பணி​களும் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.


இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் உயர்​மட்ட பாதை, சுரங்​கப்​பாதை சேர்த்து தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அதாவது 3-வது வழித்​தடத்​தில் 39.18 சதவீத​மும், 4-வது வழித்​தடத்​தில் 60.02 சதவீத​மும், 5-வது வழித்​தடத்​தில் 43.52 சதவீத​மும் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. சுரங்​கப்​பாதை பணி 23.97 கி.மீ. தொலை​வுக்​கும், உயர்​மட்டப்​பாதை பணியை பொருத்​தவரை (ஒற்​றைப்​பாதை) 35 கி.மீ. தொலை​வுக்​கும் நிறைவடைந்​துள்​ளன.


இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் மிக​வும் சவாலான பணி​யாக இரட்டை அடுக்கு மேம்​பாலப்​பணி இருக்​கிறது. இது, மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித்​தடம், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடம் இடையே​யான மெட்ரோ ரயில் பாதை​யில் சில இடங்​களை இணை​கின்​றன.


இங்கு தண்​ட​வாளப்​பணி, கான்​கிரீட் பணி, லாஞ்​சிங் யு கர்​டர் பணி ஆகிய பணி​கள் நடை​பெறுகின்​றன. இந்த பணி மேற்​கொள்ள 100-க்​கும் மேற்​பட்ட மிகப்​பெரிய கனகர இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. 2,500-க்​கும் மேற்​பட்​டோர் இப்​பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இப்​பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்​துக்​குள் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%