20 ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் முறை அமைக்க ரூ.230 கோடி: ரயில்வே வாரியம் ஒதுக்கீடு

20 ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் முறை அமைக்க ரூ.230 கோடி: ரயில்வே வாரியம் ஒதுக்கீடு


சென்னை:

சென்​னை, சேலம் கோட்​டங்​களுக்கு உட்​பட்ட 20 ரயில் நிலை​யங்​களில் ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் ரூ.230 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் உள்ள முக்கிய வழித்​தடங்​களில் ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்​க​வும், பாது​காப்​பாக இயக்​க​வும் ரயில்வே நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்துவரு​கிறது. தண்​ட​வாளம், சிக்​னல் முறை​களை மேம்​படுத்​து​வது உட்பட பல்​வேறு பணி​களை மேற்​கொண்டு வருகிறது.


அதன் ஒரு பகு​தி​யாக ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் அனுமதி அளித்​துள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்​பது ரயில்​களை பாது​காப்​பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்​திர தொழில்​நுட்ப கட்​டமைப்பு ஆகும்.


இது இயந்​திர​வியல், மின்​சா​ர​வியல் தொடர்​புடையது. ஒரு தடத்​தின் வழி​யாக ரயிலை உள்ளே வரவழைக்​கவோ, அனுப்​பவோ தேவைப்​படும் பாயின்ட்​கள், ரயில் செல்​வதற்கு ஏற்ப பூட்​டப்​பட்​டு, ரயில்​களை பாது​காப்​பாக அனு​ம​திக்​கும் ‘சிக்​னல் முறையே’ இன்​ட்டர் ​லாக்​கிங் என அழைக்​கப்​படு​கிறது.


இதில் பல வகைகள் உள்​ளன. ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்​கும்​போது, அதற்கு ஏற்ப இந்த இன்ட்​டர் லாக்​கிங் தரமும் உயர்த்தப்​படு​கிறது. சென்னை கோட்​டத்​தில் காட்​பாடி - ஜோலார்​பேட்டை இடையே உள்ள காட்​பாடி சந்​திப்​பு, லத்​தேரி, காவனூர், குடி​யாத்​தம், வளத்​தூர், மேல்​பட்​டி, பச்​சக்​குப்​பம், ஆம்​பூர், விண்​ணமங்​கலம், வாணி​யம்​பாடி, கேட்​டாண்​டபட்டி ஆகிய 11 ரயில் நிலை​யங்​களுக்கு உட்​பட்ட பகு​தி​களில் எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங் தொழில்​நுட்​பம் கொண்ட அதிநவீன சிக்​னல் திட்​டம் செயல்​படுத்த ரூ.135.65 கோடி​யும், சேலம் கோட்​டத்​துக்கு உட்​பட்ட சாமல்​பட்​டி, டேனிஷ்பேட்​டை, கருப்​பூர், வீர​பாண்டி சாலை, மகுடஞ்​சாவடி, சங்​ககிரி உள்​ளிட்ட 9 ரயில் நிலை​யங்​களில் இதை செயல்​படுத்த ரூ.108.81 கோடி​யும் தேவை என ரயில்​வேக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, ரயில்வே வாரி​யம் இந்த 2 திட்​டப் பணி​களுக்கு ரூ.230.06 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. நவீன சிக்​னல் தொழில்​நுட்​பத்தை செயல்​படுத்​தும்​போது, ரயில்​களின் வேக​மும்​ அதி​கரிக்​கும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%