
உறவுகளின் குறுகுறுப்பு எல்லாம் முணுமுணுப்புகளாகி நாட்கள் ஆயிற்று..
கூர்மையான கேள்விக்கணைகளின் சரமாரியான தொடுப்புகள் வாடிக்கையாயிற்று..
ஆறுதல் என்னும் போர்வையில் எறியப்படுகின்றன அவளது ஆறாத காயங்களின் மேல் சிறு கற்கள்..
அறிவுரைகள் என்னும் பெயரில் சிறை வைக்கப்படுகின்றது அவளது விரியத் துவங்கிய சிறகுகள்..
கோவில்களின் சாளரங்களுக்கும் மனனமாகி விட்டது அவளின் வேண்டுதல்கள்..
மருத்துவமனை வாயில்களுக்கு பழக்கமாகி விட்டது அவளின் காத்திருப்புகள்..
பரிசோதனை அறைகளுக்குள் எதிரொலிக்கின்றன அவளது ஏக்க குரல்கள்..
ஊசிகளிலும் மாத்திரைகளிலும் கரைந்து கொண்டிருக்கின்றன அவளது நம்பிக்கைகள்..
ஆளில்லா அரியணையைக் கொண்டிருக்கும் வெற்று மாளிகையாய் பொலிவிழந்து கொண்டிருக்கின்றன அவளது இளமையும் துடிப்பும்..
அந்த மாதக் கனவை தாங்கி நிற்கும் பரிசோதனை முடிவில்,
இதுவரை நிறம் மாறிடாத அந்த
இரண்டாம் கோடு மட்டும் இன்னும்
சிலாகித்துக் கொண்டேயிருக்கின்றது
உள்ளே உடைந்து வெளியே சிரிக்கும்
அவளைப் பற்றி மட்டும்!
-ஸ்டெபி ஸ் காட்பிரே
நாகர்கோவில்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?