
சித்திரை வெயிலில்
பகல் கண்ணகியை
வழி அனுப்பிவிட்டுச்
சுகங்களை சுமந்துவரும்
மாதவி நீயல்லவா!
வெளிச்சத்தை
விவாகரத்து செய்துவிட்டு பூரணமாய்
நீ நடத்தும் ராஜ்ஜியம் தான் அமாவாசையோ!
ரம்மியமான
மெல்லிசையை
உன்னோடு கலந்து
ரசித்த போது
உள்ளமெல்லாம்
சொர்க்கத்தின் நிழலாய்க் குளிர்ந்தது!
அமைதியையும்
அச்சத்தையும்
அரவணைத்து
நீ நடத்தும் நாடகத்தை
கண்டு களித்திட
ஆசை என்றாலும் தாலாட்டு பாடாத தாயாய் உறங்கவைத்து விடுகிறாய்!
சிவன்ராத்திரியில்
விடிய விடிய
கண்விழித்த போதுதான் தெரிந்தது உன் கறுத்த அழகு!
மற்றவர் பார்வையை
மறைத்து உன்னைப்
போர்வையாக்கி
குளிர்காய நினைக்கும்
கள்வர்களின் கனவை
முறியடிக்க பகிரங்கமாய் விழித்திருக்கிறது மின்சாரம்!
கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?