ஊடல்களும் கோபங்களும்..
சாதாரணமாம் தம்பதியரிடம்..
அப்படி சுலபமாக கடந்திட..
பெரும் சாகரமாக தோணுதே..
எத்தனை சுடும் வார்த்தைகள்..
நெஞ்சினை ரணமாக்குதே..
முள்ளாய் குத்தி மனத்தையும்..
சுவாசமிழக்க செய்யுதே..
நானும் வார்த்தைகளை சிந்தியது..
அப்போதைய என் ஆறுதலுக்காயினும்..
இவ்வேதனை கடக்க இயலாமல்.
தத்தளித்திடுதே மனமும்..
அல்வாவும் பூவும் வாங்கி வந்திடுவாயா..
பொங்கும் மனதை ஆற வைத்திடுவாயா..
முதலடி யார் வைப்பதென்ன..
அடுத்த ஈகோ ஆரம்பிக்குமோ..
என்னடா தாம்பத்தியமிது
என சலிக்கிறதே மனதும்..
இருந்தாலும் காத்திருக்கிறேன்..
உன் நெஞ்சில் சாய..
உன் விரல்களின் ஸ்பரிசம்
என் முதுகில் தாங்க..
தஞ்சை பியூட்டிஷியன் உமாதேவி சேகர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?