இளம் கவிஞர்கள் ஐவருக்கு தன்முனைச் சுடர் விருதுகள்

இளம் கவிஞர்கள் ஐவருக்கு தன்முனைச் சுடர் விருதுகள்


தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் முப்பெரும் விழா அண்மையில் சென்னை தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அரங்கில் நடைபெற்றது . விழாவில் குழுமத்தின் நிறுவனர் முனைவர் கா . ந . கல்யாணசுந்தரம் அவர்கள் தன்முனைக் கவிதைகளை முனைப்புடன் எழுதிவரும் ஐந்து இளம் கவிஞர்களுக்கு தன்முனைச் சுடர் விருதுகளை அறிவித்தார் . இளம் கவிஞர்கள் தமிழினியன் , தா .உ .பூர்வி , கமல் சங்கர் , பூங்குழலி அருள்பாலன் ,பா . நித்யா ஆகியோர்களுக்கு அன்புப்பாலம் இதழாளர் திரு . விஜய் ஆனந்த், அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலை வேந்தர் தாழை இரா . உதயநேசன், கவித்திலகம் வெற்றிப்பேரொளி , ஓவியக்கவிஞர் அமுதபாரதி ,குழும செயல் தலைவர் ந . வேலாயுதம் , திருமதி . அருள்செல்வி கல்யாணசுந்தரம் ஆகியோர் விருதுகள் வழங்கியும் பயனாடை அணிவித்தும் பாராட்டினர் . விழாவில் அன்பின் சங்கமம் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ , மகாகவி இதழாளர் தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா, முனைவர் வே . புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர் . இவ்விருதுக்கான ஏற்பாடுகளை செயலாளர் விகந்தன் செய்திருந்தார் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%