டெஹரான், ஜன.
- ஈரான் அரசை கவிழ்க்க டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் எங்கள் மக்களை படுகொலை செய்த வர் டிரம்ப் தான் என அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது ஈரான். அமெரிக்காவின் தடைகளால் ஈரானில் பொருளாதார நெருக்கடி மிகத் தீவிரமடைந்துள்ளது. வாழ்க் கைச் செலவுகளை எதிர்கொள்ள முடி யாமல் மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள் என ஈரான் மக்க ளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப், உங்க ளுக்கான உதவி வந்து கொண்டிருக்கி றது என்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தற்போது எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் உருவாகி யுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழுச் செயலாளர் அலி லாரிஜானி, டிரம்ப்புக்கு கடும் எதிர்ப் பைத் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களை படுகொலை செய்ததில் முதன்மையான நபர் டிரம்ப், இரண்டாவது நேதன்யாகு என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்நாட்டில் 2,500 க்கும் அதிகமான நபர்கள் பலியாகியுள்ள தாகவும், 18,000 த்துக்கும் அதிக மான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அமெக்க ஆதரவு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?