ஜெனீவா, ஜன.
ஏழை, பணக்காரர்களுக்கு இடையே நிலவி வரும் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வே உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் அடிப்படைக் கவலையாக உள்ளது என்ற உண்மை வெளியாகியுள்ளது. வேர்ல்டு எகனாமிக் ஃபோரம் யூத் பல்ஸ் 2026 அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வேகமாக மாறிவரும் பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை தற்போ தைய இளம் தலைமுறை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதை ஆராய்ந்தது. 144 நாடுகளைச் சேர்ந்த 18-30 வய துக்குட்பட்ட சுமார் 4,600 இளைஞர்க ளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 48.2 சதவிகித இளைஞர்கள் ‘பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதே’ தங்கள் எதிர்காலத்தை பெரு மளவு பாதிக்கும் முக்கிய பொருளாதா ரப் பிரச்சனையாக உள்ளது என தெரி வித்துள்ளனர். 57 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் தங்களின் மன அழுத்தம் அல்லது கவலைக்கு பொருளாதாரப் பிரச்சனைகளே முக்கியக் காரணம் என்று கூறி யுள்ளனர். அதாவது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிக ரித்து வரும் இடைவெளியே இளைஞர்க ளின் முதன்மையான பொருளாதாரக் கவலையாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் வெறும் விமர்சனம் செய்வதோடு நின்றுவிடாமல், தாங்களே தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள். அதாவது இளைஞர்கள் அரசிய லில் ஆர்வம் காட்டவில்லை என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், 36 சதவிகிதமானவர்கள் தாங்கள் தேர்த லில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 56 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் காலநிலை மாற்றம் உலகிற்கு உள்ள மிகப்பெரிய அச் சுறுத்தல் என அடையாளம் கண்டுள்ளனர். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் (57.2%), தரமான கல்வி (46.1%) மற்றும் மலிவு விலை வீட்டு வசதி (32.2%) ஆகியவை தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கிறது என இளைஞர்கள் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் ஆரம்பக்கட்ட பணிநிலை வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது என மூன்றில் இரண்டு பங்கு இளை ஞர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 சதவிகித இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுக் கருவி களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 19 முதல் 23 வரை நடை பெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.