ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை


வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: "ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம் செய்​யும் 32 நிறு​வனங்​கள், தனி​நபர்​களுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது.


சீனா​வில் இருந்து ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழி​யாக ஈரானுக்கு சோடி​யம் குளோரேட், சோடி​யம் பெர்​குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்​கள் சரக்கு கப்​பல்​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இந்​தி​யா​வின் சண்​டிகரை சேர்ந்த பார்ம்​லேன் நிறு​வனம் சார்​பில் ஈரானின் ஏவு​கணை திட்​டங்​களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள் கொள்​முதல் (யுஏஇ வழியாக)செய்​யப்​படு​கிறது.


மேலும் துருக்​கி, ஹாங்​காங், ஜெர்​மனி, உக்​ரைன் நாடு​களை சேர்ந்த சில நிறு​வனங்​களும் ஈரானின் ஏவு​கணை, ட்ரோன் தயாரிப்​புக்கு தேவை​யான பொருட்​களை விநி​யோகம் செய்து வரு​கின்​றன. அந்த நிறு​வனங்​களுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது. தடை விதிக்​கப்​பட்ட நிறு​வனங்​கள் மற்​றும் கருப்பு பட்​டியலில் சேர்க்​கப்​பட்ட தொழில​திபர்​களு​டன் உலக நாடு​கள் வணி​கத்​தில் ஈடு​படக்​கூ​டாது. இதை மீறும் நிறு​வனங்​கள், தனி​நபர்​கள் மீது பொருளா​தார தடை விதிக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.


தடை விதிக்​கப்​பட்​டது ஏன்? - அணு குண்டு தயாரிக்க ஈரான் முயற்சி செய்​வ​தாக அமெரிக்​கா, இஸ்​ரேல், ஐரோப்​பிய நாடு​கள் தொடர்ந்து குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​வைத்து இஸ்​ரேல் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக கடந்த ஜூன் 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்​கள் ஈரானின் போர்​டோ, நடான்​ஸ், இஸ்​ப​கான் ஆகிய முக்​கிய அணு சக்தி தளங்​கள் மீது சக்​தி​வாய்ந்த குண்​டு​களை வீசின.


இதனால் ஈரானின் ஏவு​கணை​கள் கையிருப்பு கணிச​மாக குறைந்​திருக்​கிறது. இந்த சூழலில் ஏவு​கணை உற்​பத்தி மற்​றும் ராணுவ ட்ரோன் உற்​பத்​தி​யில் ஈரான் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. இதற்கு தேவை​யான மூலப்​ பொருட்களை உலகம் முழு​வதும் இருந்து இறக்​குமதி செய்து வரு​கிறது. இதை தடுக்​கவே 32 நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்திருக்கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%