போட்​ஸ்​வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: 8 சிவிங்​கிப்​ புலிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

போட்​ஸ்​வானா அதிபருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு: 8 சிவிங்​கிப்​ புலிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு



புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், போட்​ஸ்​வானா நாட்​டின் அதிபர் துமா கிடி​யான் போக்கோ 8 சிவிங்​கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார்.


குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆப்​பிரிக்க நாடான போட்​ஸ்​வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்​டர் தொலை​விலுள்ள மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா​வுக்கு திர​வுபதி முர்​மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்​றனர். தேசி​யப் பூங்கா பகு​தி​யில் இரு​வரும், பாது​காப்பு வாக​னத்​தில் வலம் வந்​தனர்.


அப்​போது அங்கு வசிக்​கும் 8 சிவிங்​கிப் புலிகளை திர​வுபதி முர்​மு​விடம், அதிபர் துமா கிடி​யான் ஒப்​படைத்​தார். அவை விரை​வில் இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரப்​பட​வுள்​ளன. இவர் களஹரி வனப்​பகு​தியி​லிருந்து மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா பகு​திக்கு கொண்டுவரப்​பட்​டுள்​ளன. 3,700 ஹெக்​டேர் பரப்​பள​வில் அமைந்​துள்ள இந்த மோக்​கோலோடி தேசி​யப் பூங்​கா, மிகப் பிரபல​மான வனவாழ்வு தலமாக உரு​வாகி​யுள்​ளது.


இந்த தேசி​யப் பூங்​கா​வில் காண்​டா​மிரு​கம், ஒட்​டகச்​சி​விங்​கி, பல்​வேறு ஆப்​பிரிக்க பறவை​கள், ஊர்வன விலங்​கு​கள் ஆகியவை உள்​ளன. அடுத்த சில வாரங்​களில் இந்த சிவிங்​கிப் புலிகள் இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரப்​படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.


கடந்த 2022-ம் ஆண்டில் நமீபியாவிலிருந்து 8, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%