உக்ரைன் போரின் காரணமாக மருத்துவக் கனவை நனவாக்க ஜார்ஜியாவை தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்கள்

உக்ரைன் போரின் காரணமாக மருத்துவக் கனவை நனவாக்க ஜார்ஜியாவை தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்கள்


சென்னை, நவ.2 - 4 ஆவது ஆண்டாக நீடிக்கும் உக்ரைன் போரின் காரணமாக, இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களை தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா ஒரு புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக உருவெடுத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) தரவுகளின்படி, ஜார்ஜியாவில் இந்திய மாணவர்களின் கல்விக்கான செலவு அதிவேகமாக உயர்ந்துள்ளது. போருக்கு முன், இந்திய மாணவர்களின் முதல் 10 கல்வி மையங்களில் ஒன்றாக உக்ரைன் இருந்தது. வெளிநாடுகளில் கல்விக்காகப் பணம் அனுப்பப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜார்ஜியா 21வது இடத்தில் இருந்து 14 ஆவது இடத்திற்கு முன்னேறியது. தற்போதைய நிலையின்படி, ஜார்ஜியா மேலும் முன்னேறி 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2019 இல் 4,148 இந்திய மாணவர்கள் ஜார்ஜியாவுக்குச் சென்ற நிலையில், 2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 10,470 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, ஜார்ஜியா ஏற்கனவே மருத்துவம் மற்றும் பிசியோதெரபி போன்ற துணை மருத்துவப் படிப்புகளுக்குப் பிரபலமாக இருந்தது. ஆனால், உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, அங்குள்ள மாணவர்கள் ஜார்ஜிய பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்யத் தொடங்கியதால், இதன் வளர்ச்சி இன்னும் அதிகரித்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%