உங்க கால்களில் இப்படி இருக்கா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்!

உங்க கால்களில் இப்படி இருக்கா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்!

உங்க கால்களில் இப்படி இருக்கா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்!


World Thrombosis Day 2025: இந்தியாவில் மிகவும் பொதுவாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படும் ஒரு நிலை தான் DVT/Deep Vein Thrombosis என்னும் ஆழமான சிறை இரத்த உறைவு. இந்த நிலை ஆழமான நரம்புகளில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக ஏற்படும். பெரும்பாலும் இது கால் நரம்புகளில் தான் ஏற்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் ஏதோ சிவப்பு நிறத்தில் பூராண் இருப்பது போன்று காணப்படும்.


இந்த பிரச்சனையை கொண்டவர்கள் கடுமையான வலியையும், வேதனையையும் சந்திப்பார்கள். இந்த இரத்த உறைவு குறித்த கொடிய நோய்க்கு எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 ஆம் தேதி உலக த்ரோம்போசிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.


World Thrombosis Day 2025 Vascular Surgeon Explains About Deep Vein Thrombosis DVT

இன்று உலக த்ரோம்போசிஸ் தினம் என்பதால், நிறைய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் DVT குறித்த பல முக்கிய விஷயங்களை திருச்சி காவேரி மருத்துவமனையின் பிரபல வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அருணகிரி விருத்தகிரி இணையதள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் அவர் கூறியதாவது:


DVT/Deep Vein Thrombosis என்றால் என்ன?

"Deep Vein Thrombosis என்றால் ஆழமான சிறை/நரம்புகளில் ஏற்படுகின்ற இரத்த உறைவு நோய். இதை எப்படி அறிவது என்றால், திடீரென்று ஒரு கால் மட்டும் வலி இருக்கு, ஒரு கால் மட்டும் வீங்குகிறது என்றால், அவர்களுக்கு இந்த ஆழமான சிறை இரத்த உறைவு நோய் இருக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.



View this post on Instagram

A post shared by World Thrombosis Day (@worldthrombosisday)



அறிகுறிகள்

ஒருவருக்கு ஆழமான சிறை இரத்த உறைவு (DVT) இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தெரியும். அவையாவன:


* வீக்கம்

* கடுமையான வலி

* பாதிக்கப்பட்ட பகுதி சற்று வெதுவெதுப்பாக இருப்பது

* சிவந்தோ, நீல நிறத்திலோ இருப்பது

* நரம்புகள் புடைத்து தெரிவது

* மிகுந்த உடல் சோர்வு


யாருக்கெல்லாம் இந்த நோய் வர வாய்ப்புள்ளது?

இந்த ஆழமான சிறை இரத்த உறைவு பின்வரும் நிலையில் உள்ளவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகையவர்கள் பின்வருமாறு:


* படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு வரலாம்.

* பக்கவாதம்

* கோவிட்- 19 மூலம் பாதிக்கப்பட்டவர்கள்

* சிசேரியன் செய்தவர்கள்

* கருவுறுதலுக்கான சிகிச்சையை எடுப்பவர்கள்


எப்படி கண்டுபிடிப்பது?

"ஆழமான சிறை இரத்த உறைவு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்தின் போது டாப்புலர் என்னும் ஒரு ஸ்கேன் செய்தால் உறுதியாக தெரிந்து கொள்ளலாம்" என்று டாக்டர் கூறினார்.


சிகிச்சைகள் என்ன?

"ஆழமான சிறை இரத்த உறைவு நோயால் பாதிக்கப்படும் பொரும்பாலான நோயாளிகளுக்கு இரத்த உறைவு எதிர்ப்பு ஊசி (Anti-coagulant Injection) மருந்துகள் போதுமானது என்றும், 10-15% நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படலாம்" என்றும் டாக்டர் கூறினார்.


தடுப்பது எப்படி?

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.

* அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், கால்களை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சிகிச்சைக்கு பின் சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களின் கால்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.


அக்.14 உடன் Windows 10 கதை முடிஞ்சது.. அக்.15 முதல் உங்க லேப்டாப் பழையபடி வேலை செய்ய 3 ஆப்ஷன்!

News

2025 அக்டோபர் 14 ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட் நிறுவனமானது விண்டோஸ் 10 க்கான ஆதரவை (Windows 10 Support) நிறுத்துகிறது. இதன் பிறகு, விண்டோஸ் 10 கொண்டு இயங்கும் சிஸ்டம்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள், பக் பிக்ஸஸ் அல்லது அதிகாரப்பூர்வ ஆதரவு என எதுவுமே கிடைக்காது.


ஆக.. அக்டோபர் 14 க்கு பின்னர், அதாவது அக்டோபர் 15 முதல் விண்டோஸ் 10 கொண்டு இயங்கும் உங்களுடைய லேப்டாப், பிசி பழையபடி வேலை செய்யுமா? கண்டிப்பாக வேலை செய்யும்! உங்கள் விண்டோஸ் 10 பிசி இன்னுமும் செயல்படும். கூடவே அது புதிய வகையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பெருகிய முறையில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும்.


அக்.14 உடன் Windows 10 கதை முடிஞ்சது.. அக்.15 முதல்?

ஏனென்றால், முன்னரே குறிப்பிட்டபடி அக்டோபர் 14, 2025 க்குப் பிறகு அனைத்து விண்டோஸ் 10 வெர்ஷன்களுக்கும் (ஹோம், ப்ரோ, என்டர்ப்ரைஸ், எஜுகேஷன்) செக்யூரிட்டி அப்டேட்கள், ஃபீச்சர் அப்டேட்கள் மற்றும் டெக்னீக்கல் சப்போர்ட்டை வெளியிடுவதை மைக்ரோசாப்ட் நிறுத்திவிடும்.


மேற்கண்ட எந்த அப்டேட்டும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மட்டுமின்றி மென்பொருள் இணக்கத்தன்மை (software compatibility) மோசமடையக்கூடும், மேலும் சிஸ்டம் ஸ்டெபிளிட்டியும் (system stability) பாதிக்கப்படலாம். தகுதியான டிவைஸ்களுக்கு மட்டுமே மைக்ரோசாப்ட் நிறுவனமானது இஎஸ்யு (ESU) என்கிற நீட்டிக்கப்பட்ட செக்யூரிட்டி அப்டேட்ஸ் புரோகிராமை (Extended Security Updates program) வழங்கும்.


அக்.14 முதல் உங்கள் பிசி-க்கு விண்டோஸ் 10 சப்போர்ட் நிறுத்தப்படும் என்பதை சரிபார்ப்பது எப்படி? உங்கள் விண்டோஸ் வெர்ஷனை சரிபார்க்கவும். அதற்கு செட்டிங்ஸ் > சிஸ்டம் > அபௌட் என்பதற்கு செல்லவும். அங்கே விண்டோஸ் 10 என்று குறிப்பிட்டு இருந்தால், உங்களுக்கு இனிமேல் எந்த விண்டோஸ் 10 ஆதரவும் கிடைக்காது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இறுதியாக ஆதரிக்கப்படும் விண்டோஸ் 10 வெர்ஷன் - வெர்ஸன் 22எச்2 (Windows 10 version 22H2) ஆகும். முந்தைய வெர்ஷன்களை இயக்கும் எந்த டிவைஸுமே (எடுத்துக்காட்டிற்கு 21எச்2, 20ச்2) விண்டோஸ் 10-க்கான ஆதரவை இழக்கும். ஏனெனில் அவைகளுக்கு ஏற்கனவே "கடைசிக்கட்ட" ஆதரவை கொண்டுள்ளன அல்லது ஆதரவை இழந்துவிட்டன.


சரி இப்போது (அக்.15 முதல்) நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு 3 விருப்பங்கள் உள்ளன. முதல் விருப்பம்: விண்டோஸ் 11 க்கு அப்கிரேட் ஆக வேண்டும் (உங்கள் சிஸ்டம் அதை ஆதரித்தால்). பெரும்பாலான லேட்டஸ்ட் சிஸ்டம்கள் இதை ஆதரிக்கிறது (TPM 2.0, செக்யூர் பூட், ஆதரிக்கப்படும் சிபியு). தகுதியான ஹார்ட்வேரில் மைக்ரேஷன் பாத் ஃப்ரீயாக இருக்கும். மேலும் அப்கிரேட் ஆவதற்கு முன் உங்கள் பைல்களை பேக்கப் எடுக்க மறக்காதீர்கள்.


இரண்டாவது விருப்பம்: நீட்டிக்கப்பட்ட செக்யூரிட்டி அப்டேட்ஸ் (ESU) பயன்படுத்தவும். உடனடியாக மேம்படுத்த முடியாத சிஸ்டம்களுக்கு, அக்டோபர் 13, 2026 வரை செக்யூரிட்டி புதுப்பிப்புகளை பெற இஎஸ்யு வழிவகுக்கும். பின் குறிப்பு: இஎஸ்யு ஆனது தொழில்நுட்ப ஆதரவை உள்ளடக்காது. மேலும் உங்கள் பிராந்தியத்தை பொறுத்து மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கணக்கு அல்லது கட்டணச் சேர்க்கை தேவைப்படலாம்.


மூன்றாவது மற்றும் கடைசி விருப்பம்: இயக்க முறைமைகள் அல்லது வன்பொருளை மாற்றவும். உங்கள் சிஸ்டம் விண்டோஸ் 11 உடன் இணக்கமாக இல்லாவிட்டால் மற்றும் இஎஸ்யு ஆனது ஒரு சிறந்த ஆப்ஷனாக இல்லாவிட்டால், நீங்கள் லினக்ஸ் (Linux), க்ரோம்ஓஎஸ் (ChromeOS) அல்லது புதிய விண்டோஸ் 11-திறன் கொண்ட மெஷினிற்கு இடம்பெயரலாம்.


மேற்கண்ட எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், உங்கள் சிஸ்டமில் உள்ள முக்கியமான பைல்களை எக்ஸ்டர்னல் டிரைவர் அல்லது க்ளவுட்-க்கு பேக்கப் எடுக்கவும். அக்.14 ஆம் தேதி முதல் ஆதரவு முடிவடைவதால், விண்டோஸ் 10 கொண்டு இயங்கும் ஒவ்வொரு சிஸ்டமும் ஆபத்தான கட்டத்தில் நுழைகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிரோம்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%