உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தலையிடக் கூடாது! உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தலையிடக் கூடாது! உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை



புதுதில்லி பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலத்தின் நை னிடால் மற்றும் பவுரி கர்வால் மாவட்ட ங்களில் அமைந்துள்ளது கார்பெட் புலிகள் காப்பகம். இது இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். இந்த தேசிய பூங்காவில் சட்டவிரோத கட்டு மானத்திற்காக வனத்துறை அதிகாரி ராகுல் மீது சட்ட நடவடிக்கை எடுப்ப தை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தலையிட்டு வனத்துறை அதிகாரி ராகுல் மீது சட்ட நடவடிக்கை எடுப்ப தை நிறுத்தி வைத்ததற்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இருதரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “உயர்நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு நீதிமன்றம் என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றத் தில் ஒரு வழக்கு விசாரிக்கப்படும் போது, உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். வனத்துறை அதிகாரி உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் திற்குச் சென்றதற்கும், உயர்நீதி மன்றம் இந்த வழக்கில் தலையிட்ட தற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும் வனத்துறை அதிகாரிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப பரிந்துரை செய்கிறோம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலையிடக் கூடாது என்பது சாதாரண வழக்கறி ஞர்களுக்கு கூட தெரியும். ஆனால் உத்தரகண்ட் உயர்நீதி மன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலை யிட்டு உத்தரவு பிறப்பித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%