மூச்சு திணறும் தில்லி தலைநகரை விட்டு வெளியேற மருத்துவர்கள் அறிவுரை
Nov 02 2025
13
தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் தில்லியில் காற்று மாசு தீவிர மடைந்து வருகிறது. தற்போது தில்லியின் காற்று மாசு விகிதம் 301 முதல் 400 வரை என்ற அளவில் மிக மோசமான நிலை யில் உள்ளது. இதனால் நுரையீரல் தொற்று பாதிப்புகள் மற்றும் மூச்சு விடு வதில் சிரமத்துடன் பலரும் மருத்துவ மனைகளை நாடுவது அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளின் சுவாச நோயாளி களின் பிரிவும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், தில்லி - என்சிஆர் பகுதியில் நுரையீரல் பிரச்சனை இருப்ப வர்களாக இருந்தால் டிசம்பர் மாதம் இறுதி வரை தில்லியிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று மருத்துவமனைகளின் நுரையீரல் மருத்துவர்கள் அறிவுறுத்துவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தில்லியில் நிலவும் காற்று மாசு, தற்காலிக மற்றும் நிரந்தர பிரச்சனைகளை நுரை யீரலில் ஏற்படுத்திவிடும். மேலும் மற்ற உடல் உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியையே பாதிக்கும். நாட்டின் மற்றப் பகுதிகளை விடவும், புது தில்லியில் வாழும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதனால் சிரமப்படுபவர்கள் தில்லியை விட்டு வெளியேறுவது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?