உடுமலையில் வணிகர் திருவிழா

உடுமலையில் வணிகர் திருவிழா



பாரதி ஏர்டெல் நிறுவனம் சார்பில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் தாலுக்காவில் வணிகர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இரு சக்கர சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணியும் அவசியத்தை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் இரு சக்கர வாகன பேரணியை நடத்தியது.


இதனை காவல் ஆய்வாளர் ரவி தொடங்கி வைத்தார்.


திருப்பூர் மண்டல மேலாளர் சரவணகுமார் தலைமையில் வணிகர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உடுமலை நகராட்சி சேர்மன் மத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இதில் 120 வணிகர்கள் கலந்து கொண்டனர். விரைவான 5ஜி தொழில்நுட்பம், ஏர்டெல்லின் ஸ்பாம் தடுப்பு கவசம், வணிகர்கள் ஏர்டெல் சார்ந்த பொருட்கள் மூலம் எப்படி அதிக லாபம் ஈடுவத, மற்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%