வேலூர் பள்ளிகொண்டாவில் அமானி நகரைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் நண்பருடன் உணவகத்திற்கு வந்து நூடுல்ஸ் மற்றும் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கினார். கூடுதலாக முட்டை சேர்க்க கேட்டபோது ஊழியர்கள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உணவுக்கு பணம் கேட்டபோது, “என் அம்மா போலீஸ் எஸ்ஐ, என்னிடம் பணம் கேட்கிறாயா?” என்று தகாத வார்த்தைகளால் பேசிய மனோஜ், உணவக உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கினார். போலீசார் வந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே மீண்டும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த மனோஜை போலீசார் அனுப்பிவைத்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?