சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு: கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு: கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் சொத்துகள் முடக்கம்


 

புதுடில்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகை ஊர்வதி ரவுதேலா, நடிகர் சோனுசூட், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி ஆகியோரின் ரூ.7.9 கோடி அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


1*Bet என்ற சூதாட்ட செயலி மீது பல்வேறு மாநில விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்தன. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தொழிலில் சம்பாதித்த பணத்தை மறைப்பதற்காக விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனுசூட், ஊர்வதி ரவுடேலா உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.இந்த வழக்கில் தற்போது அமலாக்கத்துறை தற்போது சுமார் ரூ.7.92 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.


இதன்படியுவராஜ் சிங் - ரூ.2.5 கோடி


நேகா சர்மா - ரூ.1.26 கோடி


ஊர்வதி ரவுதேலா(தாயார் பெயரில்)- ரூ.2.02 கோடி


சோனு சூட்- ரூ.1. கோடி


மிமி சக்கரவர்த்தி - ரூ.59 லட்சம்


ராபின் உத்தப்பா ரூ8.26 லட்சம்

அங்குஷ் ஹஸ்ரா- ரூ.47.20 லட்சம் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%