ஔியுண்டு.. உனக்குள்ளே..
உலகுண்டு உனக்காக..
வலியுண்டு என்றாலும்
வருங்காலம் உனக்குண்டு.!
தெளிவுண்டு.. தெய்வமும் துணையுண்டு கலங்காதே மனமே.!
பணிவுண்டு என்றாலே
பாதையிலே சென்று..
கனிவுண்டு.. காலமெலாம் கரம்தரவே நட்புண்டு.. நாளை நமதென்று தடைவென்று நடைபோடு தினமே.!
விதியென்று ஒன்றிருந்தால் அதைவெல்ல மதியுண்டு.. நதியென்று நம்வாழ்வை நாம்நினைத்து நீந்துகயில் கரையுண்டு! காலத்தை வெல்க மனமே.!
இருளுண்டு என்றாலும் ஔியுண்டு எல்லோர்க்கும் ஒரு பொழுதுண்டு.. எனபதாலே.. அருளுண்டு! அன்புண்டு.. அனைவருமே வாழ்கவென நினைக்கின்ற நெஞ்சத்தில் நீடுதுயில் என்செய்யும் வெல்க தினமே.!
*வே.கல்யாணகுமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%